Categories
சினிமா தமிழ் சினிமா

“அனந்தம் தொடர்”…. டீசர் வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா….!!

நடிகர் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனந்தம் என்ற தொடரின் டீஸரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் பிரியா.வி உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு ஏ.எஸ் ராம் இசையமைத்துள்ளார். இந்த தொடரில் அஞ்சலி, ராவ், வினோத் கிஷன், சம்பத் விவேக் பிரசன்னா, அரவிந்த் சுந்தர் உட்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த தொடருக்கான டீசரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |