Categories
தேசிய செய்திகள்

அனல் மின் நிலையத்தில் இவ்வளவு பிரச்சனையா?…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவால் பெரும் பரபரப்பு….!!!!!

அனல் மின் நிலையங்களின்  மூலம்  ஏற்படும் பிரச்சனை  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் அமைந்துள்ள அனல் மில் நிலையங்களில் இருந்து  சாம்பல் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்காக பல சட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியில் அமைந்துள்ள பல்வேறு அனல் மின் நிலையங்களில் இருந்து சாம்பலை எடுத்துச் செல்வதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து உண்மை  அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என  என உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக ஒரு கூட்டுக் குழுவையும் அமைத்துள்ளது.

Categories

Tech |