மேட்டூர் அனல் மின் நிலைய அலுவலகரிடம் ரூ2 3/4 லட்சத்தை மோசடி செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார்.இவர் கள அலுவலராக மேட்டுர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நிலத்தில் செல்போன் டவர் வைப்பது தொடர்பாக ஒரு மர்மநபர் இவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின் செல்வகுமார் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு முன்பணமாக 63 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
மேலும் அந்த மர்ம நபரிடம் செல்வக்குமார் வங்கிக் கணக்கு விவரங்களை கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென செல்வகுமார் வங்கி கணக்கிலிருந்து 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது. இதுதொடர்பாக மாவட்ட பைசர் கிரைம் காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.