கோழி ஒன்று தாயை இழந்து தவித்த நாய்குட்டிகளுக்கு தாயாய் மாறி அரவணைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிப்பவர் ஜெகன். இவருடைய தன்னுடைய வீட்டில் அழகிய நாய்க்குட்டி ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நாய்க்குட்டியானது 5 நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. ஆனால் நாய் குட்டிகளை ஈன்ற பத்து நாட்களுக்குள் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கண்களை கூட திறக்காத அந்த நாய் குட்டிகள் பசிக்காக தாயை தேடி அவர் வீட்டில் அங்கும் இங்குமாக சுற்றி வந்துள்ளது.
இதனால் ஜெகன் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் வளர்த்து வந்த கோழி நாய் குட்டிகளை அரவணைத்து பாதுகாத்து வந்துள்ளது. மேலும் மற்ற விலங்குகளிடமிருந்து நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடித்துள்ளது. இது வீட்டில் உள்ள அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோழிக்கு நாய் மீது கொண்ட இந்த தாயன்பு கொண்ட பாசத்தை பார்த்த அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.