Categories
சினிமா செய்திகள்

“அனிருத் என்னிடம் போன் செய்து பீல் பண்ணினார்”… பேட்டியில் பகிர்ந்த மாளவிகா மோகனன்…!!!

இசையமைப்பாளர் அனிருத் தன்னிடம் பீல் பண்ணி கூறியதை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் கூறியுள்ளதாவது, “மாஸ்டர் திரைப்படமானது கொரோனா காரணத்தினால் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அனிருத் தனக்கு போன் செய்து, என்னது இப்படி ஆயிடுச்சு. எல்லாம் சீக்கிரம் சரியாகி பழையபடி பட வேலைகளை பார்க்க வேண்டும்” என அஅனிருத் மனம் வருந்தி பேசியதாக கூறியுள்ளார்.

Categories

Tech |