Categories
விளையாட்டு

அனில் கும்ப்ளே-விராட் கோலி மோதல் விவகாரம்….. வினோத் ராய் சொல்வது என்ன?….!!!!!

இந்தியகிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அனில் கும்ப்ளே – விராட் கோலி இடையிலான மோதல் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் அனில்கும்ப்ளே தலைமை பயிற்சியாளராகயிருந்த சமயத்தில், விராட் கோலி கேப்டனாக இருந்தார். அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத்ராய் தலைமையிலான பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு நிர்வகித்தது. அப்போது அனில் கும்ப்ளே -விராட் கோலி இடையில் கடும் மோதல் இருந்து வந்தது. அதாவது அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என தினசரி விராட்கோலி தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வினோத் ராய் அப்போது சொல்லியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் சச்சின் -கங்குலி -லட்சுமணன் அடங்கிய கிரிக்கெட் நிர்வாகக்குழு இவ்விவகாரத்தை கோலி – கும்ப்ளே போன்ற இருவரிடமும் தனித்தனியாக விசாரித்து கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் நீடிக்கலாம் என்ற போதும், அவர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விலகிவிட்டார்.

அதனை தொடர்ந்து தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அப்போது அந்த நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பு வகித்த வினோத்ராய், “Not Just a Nightwatchman – My Innings in the BCCI” எனும் புத்தகத்தினை எழுதி வெளியிட்டு உள்ளார். அந்தபுத்தகத்தில் கோலி – கும்ப்ளே விவகாரம் தொடர்பாக எழுதி உள்ளார். அவ்வாறு கோலி -கும்ப்ளே விவகாரம் தொடர்பாக எழுதியுள்ள வினோத் ராய், அனில் கும்ப்ளே அளவிற்கு அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், இதன் காரணமாக அவரைக் கண்டு இளம்வீரர்கள் அஞ்சி நடுங்குவதாகவும் கோலி குற்றம் சாட்டினார்.

மேலும் கேப்டனும் அணி நிர்வாகத்தினரும் கும்ப்ளேவின் அதீத ஒழுக்ககட்டுப்பாடுகளால் அதிருப்தியில் உள்ளதாக கூறினர். இதனால் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என கோலி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து திரும்பியதும் அனில் கும்ப்ளேவிடம் பேசினோம். கேப்டன் மற்றும் அணிவீரர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்ததாகவும், தான் நடத்தப்படும் விதம் தொடர்பாகவும் கும்ப்ளே அதிருப்தியும் தெரிவித்தார். ஒரு சீனியராக ஒழுக்கத்தையும் தொழில் முறையையும் வீரர்களுக்கு கற்பிப்பது  எனது கடமை ஆகும். என்னுடைய கருத்துகளுக்கு வீரர்கள் மதிப்பு அளிக்க வேண்டும். எனினும் அதுஎதுவுமே நடக்காதது தொடர்பாக கும்ப்ளே வேதனை தெரிவித்ததாக வினோத்ராய் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |