Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள் ஹைதராபாத்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம்… மீறினால் நடவடிக்கை பாயும்… காவல்துறை எச்சரிக்கை..!!

பெரம்பலூர் அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினாலோ, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மங்களமேடு உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தல், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு முறை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் முன்னிலை வகுத்துள்ளார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சுமதி ஆகியோர் கூட்டத்தில் பேசினார். மங்களமேடு உட்கோட்ட காவல் நிலைய பகுதியான பெரியம்மாபாளையம் சாலை, குன்னம் பேருந்து நிலையம், லெப்பைகுடிகாடு மார்க்கெட் பகுதி, திருமாந்துறை கைகாட்டி, வாலிகண்டபுரம் கடைவீதி, கீழப்புலியூர், அகரம்சீகூர், நெய்க்குப்பை, கைகளத்தூர், பசும்பலூர், நூத்தப்பூர் ஆகிய ஊர்களின் பேருந்து நிலையங்கள் என 12 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளை மீறினாலோ, மற்ற இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றி பேசக் கூடாது என்றும் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளனர். கல்வி மையங்கள் அருகில் எக்காரணம் கொண்டும் பிரச்சாரம் செய்யக்கூடாது. கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு காவல்துறையினரின் கூறிய அறிவுரையை ஏற்று அதனை பின்பற்றி நடக்க வேண்டும். இந்த கூட்டத்தில் இவ்வாறு 37 விதிமுறைகளை மீறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |