அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்க பள்ளி நுழைவு வாயில் முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் மாணவரான தமிழ்மணி(80) சிலருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்தால் முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த பொருட்களை புதிய கட்டிடத்திற்கு மாற்றினர். இதனைத் தொடர்ந்து பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.