Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கொண்டு வந்த பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் நடவடிக்கை ….!!

அனுமதி இன்றி லாரியில் குண்டு கற்கள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவலபேரி ஆற்றுப்பாலம் பகுதியில் தாசில்தார் பழனி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையில் அனுமதியின்றி  2  யூனிட் குண்டு கற்களை லாரியில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஓடுனரான மாரியப்பனை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த லாரி மற்றும் குண்டு கற்களை  பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |