அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மகேஸ்வரன், மாரியப்பன், கண்ணன், முருகன் ஆகியோர் வீடுகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி சரவெடிகள தயாரித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெடிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.