Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி செய்த செயல்….. வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள்…. படுகாயமடைந்த 3 பேர்…!!

பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மடத்துப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்திரப்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த என்மத்ராவ் ஆகியோர் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி பட்டாசுக்கு தேவையான திரியை தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் என்என்மத்ராவ், லிட்டின், ஹேமந்த் ராவ் ஆகிய மூன்று வடமாநில தொழிலாளர்கள் பட்டாசுக்கு தேவையான திரிகளை தயார் செய்த பிறகு அதன் கழிவுகளை அருகிலிருந்த ஓடையில் வைத்து கொளுத்தினர்.

அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மூன்று பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |