காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றியதால் தர்ணாவில் ஈடுபட்டார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு கைது செய்து வேனில் ஏற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.