Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்… 5 பேர் படுகாயம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மலையரசி அம்மன் கோவிலில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த நெடுமரம் ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை ஊர்க்குளத்தான்பட்டி, சில்லாம்பட்டி, நெடுமரம், உடையநாதபுரம், என்.புதூர் ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். இந்த வருடம் தேர்தலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அந்த கோவிலில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த கிராம மக்கள் அனுமதியின்றி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே மாடுகளை அவிழ்த்து விட்டனர். இதில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை மீறி தப்பி ஓடியது. சில காளைகள் வீரர்கள் அடக்கி பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Categories

Tech |