மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது மாடு தாக்கியதால் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உற்க்குத்தான்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் அரசு பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 200-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர்.
இந்நிலையில் காளைகள் மாடுபிடி வீரர்களான சிவசக்தி, முருகானந்தம், கார்த்திக், பிரபு மற்றும் ரங்கேஸ் ஆகியோரை தாக்கியுள்ளனது. இந்த வீரர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வி.ஏ.ஓ. கோகிலா அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விழாவை நடத்திய 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.