Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி பேரணி…. 1000 பேர் கைது…. காவல்துறை அதிரடி….!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி காவல்துறையினர் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக 1000 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கட்சி சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட போது காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி அவர்கள் இந்த பேரணி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகின.

இதனையடுத்து தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 1300 காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை தென்காசி பள்ளிவாசல் அருகில் பேரணி தொடங்கியது. இப்பேரணியில் சீருடை அணிந்து மிடுக்காக நடந்து வந்தவர்களுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இந்த பேரணி  கொடிமர திடலுக்கு வந்த போது காவல்துறையினர் சுமார் 1000 பேரை  கைது செய்தனர். அவர்களை போலீசார் தென்காசி வாய்க்கால் பாலம் அருகில் உள்ள இசக்கி மஹால் மற்றும் கீழப்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Categories

Tech |