திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் முன் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாநகராட்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈபிஎஸ் உள்ளிட்ட 90 பேர் மீது அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது. கொரோனா விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.