Categories
Uncategorized

அனுமதியின்றி மணல் கடத்தல்….கையும் களவுமாக சிக்கிய நபர்…. ரோந்து போலீசார் அதிரடி….!!

மலையடிவாரத்தில்  காவல்துறையினர்  அனுமதியின்றி  மணல் கடத்தியவரை போலீசார்  கைது  செய்துள்ளனர். 

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் அருகே உள்ள கவுரி மலையடிவார பகுதியில் காவல் துறையினர் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு  இருந்துள்ளார்.  அப்போது ரோந்து பணியில்  இருந்த  காவல்துறையினர் அவரை  மடக்கிப்பிடித்து  கைது செய்ததோடு மணல்  கடத்தலுக்கு  பயன்படுத்திய  டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

 

Categories

Tech |