Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அனுமதியின்றி முல்லை பெரியாற்றிலிருந்து விளைநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குழாய்கள்”….. அகற்றப்பட்டதால் விவசாயிகள் வேதனை…!!!!!!

முல்லைப் பெரியாற்றிலிருந்து அனுமதி இன்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் தென்னை, நெல், வாழை, திராட்சை உள்ளிட்டவைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் குழாய்களில் அனுமதி இல்லாமல் தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்திருக்கின்றது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று சோதனை செய்ததில் அனுமதி இன்றி விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி இன்றி தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை அகற்றினார்கள். இதையடுத்து அனுமதி பெற்று வந்தால் மட்டுமே இப்பகுதியில் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் எனவும் அனுமதி பெறாமல் தண்ணீர் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளும் அதிகாரிகள் தெரிவித்தார்கள். அதிகாரிகள் திடீரென விளைநிலங்களுக்கு செல்லும் குழாய்களை அகற்றியதால் தண்ணீர் இல்லாமல் விளைநிலம் வாடும்நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |