Categories
மாநில செய்திகள்

“அனுமதி இன்றி செயல்படும் விடுதிகள்” 15 நாள்தான் டைம்….. அமைச்சர் கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் சமூக பாதுகாப்பு துறை இணையதளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் கீதா ஜீவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.

அவர் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் சமூக நலத்துறை மூலமாக நேரடியாக ஆய்வுகள் நடத்தப்படுகிறது என்றார். அதன்பின் விடுதிகளில் ஏதேனும் வசதிகள் குறைவாக இருந்தால் அதை சரி செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இந்த கால அவகாசத்திற்குள் விடுதிகளில் இருக்கும் குறைபாட்டை நிர்வாகம் சரி செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எனவும் எச்சரித்தார்.

Categories

Tech |