Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்…. எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

சென்னை மாநகரில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனே அகற்ற வேண்டும் இதனை மீறும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரம் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது “சென்னையில் உரிமை இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் பதாகைகள் உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த சமயத்தில் உரிமம் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள 23 விளம்பர பலகைகள் மற்றும் 70 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் உரிய அனுமதியின்றி பலகைகளோ, பதாகைகளோ வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |