Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம இப்படி பண்ணிட்டாங்க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை வழக்குப்பதிவு..!!

சிவகங்கையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக இரண்டு கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 26-ஆம் தேதி அன்று பிற்பகலில் திருப்பத்தூர் தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு அனுமதி இல்லாமல் கட்சியினர் பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை துணை ஆய்வாளர் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் சிங்கம்புணரி தி.மு.க. நகர செயலாளர் யாகூப் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று கிருங்காக்கோட்டையில் அ.ம.மு.க. வேட்பாளர் உமாதேவன் கடந்த 26-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கட்சியினர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இது குறித்து சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கிருங்காக்கோட்டை ஊராட்சி செயலாளர் முருகேசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |