Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்திருக்காங்க..! விதிமுறைகளை மீறிய ஆர்ப்பாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக உலகம்பட்டி காவல்துறையினர் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சின்னையா, தேவேந்திரன், சண்முகவேலு, செல்வராஜ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |