சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 19 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஐந்து விளக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் கொரோனா பரவி வரும் காலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் மக்கள் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் உட்பட 19 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.