Categories
சினிமா தமிழ் சினிமா

அனுமதி கேட்ட தம்பி…. “ஓகே சொன்ன தல அஜித்”… வெளியானது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்னவென்பதை வலிமை பட நடிகரான ராஜ் ஐயப்பா தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருக்கிறார் ராஜ் ஐயப்பா. இந்நிலையில் அஜித்திடம் அனுமதி வாங்கி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ராஜ். அந்த ஸ்டேட்டஸில் ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் என்பது தனிநபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர, குணத்தை அல்ல.

சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இல்லாத அஜித் வாட்ஸ் அப் பயன்படுத்துவது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

Categories

Tech |