Categories
அரசியல் மாநில செய்திகள்

அனுமதி கொடுக்குறீங்க ? பெருந்தன்மைனு சொல்லுறீங்க ? திமுகவின் ‘பி டீம்’ யார்? மாஸாக பதிலளித்த டிடிவி….!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சசிகலா உடல் நிலை நார்மல் ஆயிட்டாங்க. இருந்தாலும் மருத்துவர்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுங்க என்று அட்வைஸ் பண்ணி இருக்காங்க. 24ஆம் தேதி அம்மாவுடைய திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்துவாங்க, கோவில் போகணும்னு சொன்னாங்க. சசிகலா தொடர்ந்த வழக்கில், நல்ல விதமான தீர்வு கிடைக்கும்ன்னு நம்புறோம். எங்களுக்கு சாதகமான தீர்வு சட்டப்படி கிடைக்கும்ன்னு நம்புறோம்.

சசிகலா மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பார்கள்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள ரசாயன மாற்றம் தொடர்ந்து இருக்கு.  அதனால் தான் நிறைய பேர் அச்சத்தால ஏதேதோ பேசிட்டு  சசிகலா பின்னால் தான் அதிமுக அணிவகுக்கும் என்று கார்த்திக் சிதம்பரம் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காரு, அது அவருடைய கருத்து. பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் திமுக ஜெயிப்பதற்கு அமமுக வார்ட் உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அமமுக என்பது திமுகவின் பி  டீம் எனபது உறுதியாகியுள்ளது என்ற அமைச்சர் ஜெயக்குமார் கூறியது சிரிப்பு தான் வருது. மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்கு சிலை வைப்பதற்கு நாங்க தான் பெருந்தன்மையோடு அனுமதி கொடுத்தோம் என அமைச்சர் உதயகுமார் சொல்லியுள்ளார்.

பொது இடங்களில் தலைவர்களுக்கெல்லாம் சிலை வைப்பதற்கு அனுமதி ரொம்ப கொடுப்பது அல்ல. எல்லாரும் சிலை வைக்க வருவாங்க, அதுல பல பிரச்சனைகள் வருது என அனுமதி வழங்குவது கடினமாக இருக்கும் போது, நாங்க பெருந்தன்மையா மதுரையில் சிலை வைக்க வழங்கியது பெருந்தன்மைனு சொல்லுறாங்க.கலைஞ்சர் அவர்களுக்கு முதல் சிலை மதுரையில் வச்சுட்டோம் அப்படினு திமுகவினர் சொல்லுறாங்க. இது பெருந்தன்மை என்றால் அமைச்சர் திமுகவின் பி டீம் ஆ ? சி டீம் ஆ ? எ டீம் ஆ ? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |