கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டம் உருவானால் நிச்சயமாக அங்கு ஒரு மாவட்ட ஆட்சியர் வேண்டும்.. நீதிமன்றம் வேண்டும்.. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேண்டும்.. அரசு அலுவலகங்கள் எல்லாம் தேவை.. இதற்காக 35 ஏக்கர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது.. வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது
இதனை அமைக்க கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய வீரசோழபுரம் பகுதியில் இருக்கக்கூடிய அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசு தேர்ந்தெடுத்து, இதற்கான அரசாணையை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து ரங்கராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..
அந்த மனுவில், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு வருமானம் என்பது அதில் உள்ள நிலம் சார்ந்த விஷயத்தில் இருந்துதான் வருகிறது.. இப்படியான அரசு விஷயத்திற்கு கோவில் நிலங்களை எடுத்தால் நிரந்தரமாக அரசு நிலமாகவே மாறிவிடும்.. எனவே அதை செய்யக்கூடாது என்று வாதத்தை முன்வைத்தார் ரங்கராஜன்..
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நீங்கள் லீசுக்கு தான் எடுக்க வேண்டும்.. நிரந்தரமாக எடுக்கக்கூடாது இத்தனை வருடங்களுக்கு மொத்தமாக பணத்தை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைக்கு உட்பட்டு நிலத்தை கையகப்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்து விடுகிறார்கள்..
இதனையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரங்கராஜன் மேல்முறையீடு செய்திருந்தார்.. இந்த மேல்முறையீடு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.. அப்போது, மனுதாரர் தரப்பில் இடைக்கால தடை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் மேற்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான, நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது இனி மறு உத்தரவு வரும்வரை செய்ய முடியாது.