Categories
மாநில செய்திகள்

அனுமதி பெறாத சிலைகளை… உடனே அகற்ற வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெறாமலும், பெற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டு சிலைகளுக்கு மரியாதை செய்கின்றனர்.

பல இடங்களில் இதன் காரணமாக சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று அவர்களுக்கு மரியாதை செய்வதாக கூறி ஏராளமான கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. என்று கூறி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். எனவே அங்கீகரிக்கப்படாத சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து சிலைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.ர் மேலும் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |