அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுமார் 2 டன் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயரமுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் அடிப்படையில் நாளை(ஜனவரி 2) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக கோவில் முழுவதிலும் சுமார் 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டயாமாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.