பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி இருக்கிறது. நேற்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கு 108 வட மாலை சாத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் 10 கிலோ எடையில் கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
Categories