சைலன்ஸ் படம் எதிர் பார்த்த வரவேற்பை பெறாததால் புராண படங்களில் நடிக்க அனுஷ்கா முடிவெடுத்துள்ளார்.
நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமாவில் 2006ல் ‘ரெண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். பல வெற்றி படங்களில் நடித்து வந்த அனுஷ்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த ஒரு படமும் நடிக்கவில்லை. அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளார். அனுஷ்காவின் பாகுபலி, ருத்ரமாதேவி , போன்ற சரித்திர கதையம்சம் கொண்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் அனுஷ்கா புராணப் படங்கள் நடிக்க ஆர்வாமாக உள்ளார். இந்நிலையில் சகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது .நல்ல கதை அமையும் என்று எதிர் பார்க்க படுகிறது .ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் தான் சகுந்தலம் படத்தையும் இயக்குகிறார்.இதில் சகுந்தலை வேடத்தில் நடிக்க அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். ஏற்கனவே சகுந்தலை வாழ்க்கையை மையமாக வைத்து சில புராண படங்கள் வந்துள்ளன. மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1940-ல் சகுந்தலை படம் வெளிவந்துள்ளது. 1961-ல் அசாம் மொழியிலும் 1965-ல் மலையாளத்திலும் சகுந்தலை கதை படமாகி வெளியானது. அந்த வரிசையில் அனுஷ்கா படமும் வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.