உலக நாடுகளைப் போல இந்தியாவும் ராணுவத்தின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பருவ கால மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எரிபொருளை சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் நமது ராணுவத்திலும் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அதில் வாகனங்களில் 24 சதவீதமும், பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டார் சைக்கிளில் 49 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு வகையான நிலப்பகுதிகளில் மின்சார வாகனங்களின் தேவை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்துக்கு வெளியே வாகனம் நிறுத்தும் இடங்களில் மின்சார சார்ஜிங் வசதிகளை செய்வதற்கு உள்கட்ட அமைப்பு பணிகள் போதிய அளவில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தி சார்ந்த சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களை குறைக்கவும், புதைபொருள் படிமங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள் பயன்பாட்டை சார்ந்து இருக்கும் நிலையில் இருந்து விடுபடும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.