அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளார்கள் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகம் தொடங்கியுள்ளது. சளி, இருமல், தலை வலி இருப்பவர்கள் இந்த முகாமுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.
டெங்கு, ப்ளூ காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாளை முதல் எந்த பகுதியிலாவது மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருந்தால் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆயிரம் மருத்துவர் காலி இடங்களை நிரப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சூனம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வந்த பின் வேறு இடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
மருத்துவர் பரிந்துரை அடிப்படையிலேயே செவிலியர் பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரத்தில் மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிரசவ நேரத்தில் மருத்துவர் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.