Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசு துறைகளிலும் அதிரடி…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!!

காகிதமில்லா நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று பெற வேண்டியது மிகவும் முக்கியம். இதனை டிஜிட்டல் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் காகிதமில்லா நிர்வாகம் என்ற நடைமுறைப் ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த டிஜிலாக்கர் முறையில் இணைய அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலமாக நாட்டின் மக்கள் எந்த மூலையில் இருந்தாலும் ரேஷன் அட்டை, வாக்காளர்  அடையாள அட்டை, வாகன உரிமம், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் டிஜிலாக்கர் மூலமாக பெற முடியும். இருப்பிடம் மற்றும் இதர வருவாய்துறை சான்றிதழ்கள் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு மாநில பள்ளி தேர்வாணையம் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ், பொதுத் துறை வாகனம் மூலம் வாகன பதிவு சான்றிதழ் போன்றவை டிஜிலாக்கர் முறையை பயன்படுத்தி வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது பொது வினியோகத் துறையில் டிஜிலாக்கர் சேவை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. எனவே அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் என அனைத்து அரசு அலுவலகங்களும் டிஜிலாக்கர் முறையின் மூலம் பதிவு செய்ய வேண்டும்”  என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |