சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நோய்த்தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. அரசு ஓமந்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ந 28 முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், இணையதளத்திற்கு அடிமையாகி தவிக்கும் சிறுவர்கள், மாணவர்களுக்கு தொலைத்த வாழ்க்கையை மீண்டும் பெற இணையதள சார்பு மீள் வாழ்வு மையம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.