Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து உரிமைகளை…. மாநில அரசு இழந்து வருகிறது…. சீமான் காட்டம்…!!!

இன்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்தவகையில் சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு  சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆனால், இங்கு இரட்டை ஆட்சி நடக்கிறது என சொல்கிறார்கள். இத்தனை காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, எதற்கு கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்கினார்கள்.

அனைத்து உரிமைகளை மாநில அரசு இழந்து வருகிறது. ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் இவர்களை ஆளுநர்களாக நியமிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறினார். இனிமேல் மக்களுக்காக சேவை செய்து வந்த தலைவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும் அரசியல் தலைவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Categories

Tech |