Categories
மாநில செய்திகள்

அனைத்து ஊடகவியலாளர்களும் முன்களப்பணியாளர்கள்…. சீமான் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற ஊரடங்கு காலத்திலும் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு அடையாள அட்டை பெற்ற ஊடகவியலாளர்களை சிங்கள பணியாளர்களாக கடந்த மே மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அனைத்து ஊடகவியலாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கப் படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Categories

Tech |