Categories
மாநில செய்திகள்

அனைத்து ஊழியர்களுக்கும்…. ஊதியத்துடன் விடுமுறை- அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அறிகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,”  ஏப்ரல் -6 ஆம் தேதியன்று அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கட்டுமான தொழிலார்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா பணியாளர்களுக்கும் ஏப்.6-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |