Categories
தேசிய செய்திகள்

அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை ரத்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பீகார் மாநிலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 5 வரை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.

அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை மற்றும் புதிய நோயாளிகள் அதிகரித்து வருவது காணப்படுவதால் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற அறிவிப்பு மற்ற மாநிலங்களுக்கு வரக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |