Categories
மாநில செய்திகள்

முதல் ஆளாக சீட்டு புடிச்ச செல்வராஜ்….. வந்த உடனே அதிரடி காட்டிய ஜெயக்குமார்…. ஆடிப்போய் நின்ற ஓபிஎஸ் தரப்பு….!!!!

தமிழக தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு வந்த ஜெயக்குமார் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது.  இந்த பணியை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனையை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த இந்த கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிமுக தரப்பிலிருந்து முதல் ஆளாக ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூட்ட அரங்கிற்கு வந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வருகை புரிந்தனர். அப்போது கோவை செல்வராஜ் முன்பு இருந்த அதிமுக பெயர் பலகையை எடுத்த ஜெயக்குமார், தங்கள் இருக்கைக்கு முன்பு வைத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுக சார்பாக ஆர்எஸ் பாரதி, பரந்தாமன், காங்கிரசிலிருந்து தாமோதரன், பாஜகவில் இருந்து கருநாகராஜ், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Categories

Tech |