Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

அனைத்து கிராமங்களுக்கும்…. கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் – டிடிவி தினகரன் உறுதி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “கோவில்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |