இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று பென்னிக்ஸ் சகோதரி பெர்சி தெரிவித்துள்ளார்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் ரகு கணேஷ் என்ற காவல் துணை ஆய்வாளரை கைது செய்து இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென்னிக்ஸ் சகோதரி பெர்சி உயர்நீதிமன்றத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நீதிமன்றம் நீதியை நிலை நாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வரை நாங்கள் நீதிமன்றத்தை நம்பியிருக்கின்றோம்.
எங்க குடும்பத்திற்கு நீதி கிடைக்க ஆதரவாக இருந்த எல்லா தமிழ் சமுதாயத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்திய தேசம், பிற தேசங்களில் இருந்து எல்லாரும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தாங்க. எல்லா விதமான மக்களுக்கு நன்றி. எங்க குடும்பத்துக்கு நடந்த மாறி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. நீதிமன்றம் அதற்கான நடவடிக்கை எடுக்கணும் என்று தெரிவித்துள்ளார்.