இந்து சமய அறநிலைத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை அமைக்க பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.