தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவில் சொத்து விபரம், வருவாய், வாடகை நிலுவைத்தொகை, பணியாளர் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் போன்ற தகவல்கள் அடங்கிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கோவில்களின் மேம்பாடு பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துறை தலைமையகத்தில் நடந்தது.
இதில் அமைச்சர் கூறியதாவது, சென்னையில் 1,206 கோவில்கள் உள்ளன. சட்டசபை அறிவிப்பில் 100 க்கும் மேற்பட்ட திட்ட பணிகளுக்கு கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை சட்டசபை தொகுதி வாரியாக உள்ள கோவில்களில் அனைத்து விவரங்களும் மாவட்டம் வாரியாக ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையாக அளிக்கப்பட வேண்டும். மேலும் சொத்து விபரம், வருவாய்,வாடகை நிலுவைத்தொகை, பணியாளர்கள் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் போன்ற அனைத்து தகவல்கள் அடங்கிய பெயர் பலகையை கோவில்களில் வெளிப்படையாக வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.