Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு… அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி…!!!

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் சில கட்சிகள் அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் அனைத்து சமூகத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தர பாடுபடும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு 40 வருடங்களாக பாமக செய்த தியாகங்களுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |