தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கோவிலின் ஆகம விதிகளை தெரிந்தவர்களையே கோயில் அர்ச்சகராக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.