தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பயிற்சி பள்ளியில் படித்த 28 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1972இல் சட்டம் கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.