அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது அனைத்து மாநிலங்களிலும் நிகழ வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முறையாகப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற முடியும். மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. இதனை அனைவரும் வரவேற்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.