Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்…. கமல்ஹாசன் பாராட்டு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |