Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலிச்சட்டம் திருத்தப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலிச்சட்டம் திருத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் கொண்டுவர இருக்கும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பணி வழங்க வேண்டும், இரவு பணியும் சரியான பாதுகாப்புடன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலிச்சட்டம் திருத்தப்படும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ சோதனையை கட்டாயம். பத்து ஊழியர்களுக்கும் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. பலன்களை வழங்கப்படும். ஊழியர்களின் விருப்ப அடிப்படையில் ஈ.எஸ்.ஐ திட்டம் செயற்படுத்தப்படும் என கூறியுள்ளார். மேலும் கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு தொழில்களுக்கு ரூ.4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்கூட்டுறவு வங்கிகளுக்கு மறு நிதியாக நபார்டு வங்கி ரூ.29500 கோடி வழங்கியுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |