Categories
ஆன்மிகம் இந்து

அனைத்து நட்சத்திரகாரர்களும் செல்ல வேண்டிய கோவில்கள் இதுவே..!!

உங்கள் பிறந்த நட்சத்திரம் எது என உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திர அதிதேவதை மூலம் கிடைக்கும் நற்பலன்களை முழுமையாக நீங்கள் பெறுவதற்கு செல்ல வேண்டிய கோவில்கள் எது.? வணங்க வேண்டிய தெய்வம் எது.? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.? இவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்வோம்.

ஒருவருடைய ஜாதகப்படி பிறந்த காலத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதுதான் அவருடைய ராசி. அதே சந்திரன் எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் அந்த ஜாதகருக்கு உரியது. பிறந்த காலத்தில் நட்சத்திர சாராம்சத்தை கொண்டுதான் ஒருவருடைய வாழ்நாள் முழுவதற்குமான தசாபுத்திகள் கணக்கிடப்படுகின்றன.

நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழில், திருமணம், சொத்து சேர்க்கை என்று எல்லா விஷயங்களுக்கும் நட்சத்திரத்தை வைத்து பலன்களை கணிப்பது துல்லியமாக இருக்கும், இது ஜோதிடம். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் உடைய குண இயல்புகளை தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்திற்கு இருக்கிறது.

அதேசமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தாங்கிக்கொள்ளும் சக்தி பெறவோ, அல்லது நிவர்த்தி செய்து கொள்ளவும், அந்த நட்சத்திரத்தையும் ஆளுமைக்கு உட்படுத்தியது, தெய்வங்களால்தான்  இயலும். அந்தந்த நட்சத்திரக்காரர்கள், நட்சத்திரத்திற்கான தனி கோவில்களும், அவற்றிற்கான தலங்களும் அமைந்துள்ளன.

அந்த திருத்தலங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கை வழங்கிட, ஆண்டவனை வழிபட நினைப்பது, நம்முடைய அனைவரின் எண்ணமாக இருக்கும். 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே அவற்றிற்குரிய திருத்தலங்களும், தல விருட்சங்களும் உள்ளன. அவரவர் நட்சத்திரத்திற்குரிய திருக்கோவில்கள் சென்று இறைவனை வழிபட்டு தலவிருட்சமாக நீரூற்றி வந்து பயன்பெறலாம்.

இருப்பினும் இந்த 27 நட்சத்திரங்களுக்கு என்று தனித்தனியே ஒரு சிவலிங்கத் திருமேனி அமைந்திருக்கும், கோவில்கள் சில உண்டு. அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்குமான சிவலிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்க இரண்டு கோவில்கள் உள்ளன. அந்த இரண்டு கோவிலுக்கு சென்று நட்சத்திரங்களுக்குரிய சிவலிங்கத்திற்கு பூஜை செய்து நெய் விளக்கு ஏற்றி, அந்த நட்சத்திர நாளன்று வேண்டுதல்கள் செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

1.சென்னை பாரிமுனையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவெற்றியூர்:

தேவாரப்பதிகம் பெற்ற மூவர் பாடிய தலம் இது. புற்றிடங்கொண்டார் என்ற பெயரில் ஈசன் சுயம்பு மூர்த்தி அருள்பாலிப்பது இந்த தளத்தில் தான். இரண்டு நாட்கள் மட்டுமே குவளை நீக்கப்பட்ட நிலையில் அவரை தரிசிக்க முடியும். இந்த திருக்கோவிலில் 27 நட்சத்திர லிங்கங்கள் பிரகாரத்தில் அடுத்தடுத்து கம்பிகளை சுற்றி வரிசையாக அமைந்துள்ளன.

2. இடைமருது என அழைக்கப்படும் திருவிடைமருதூர்:

மூன்று தளங்களில் நடுவில் உள்ள தலம் மத்திய அர்ஜுனர் ஆக இங்கே சிவன் குடிகொண்டிருக்கிறார். ஏழு கோபுரங்களும், 7 பிரகாரங்களும் கொண்ட மிகப் பெரிய கோவில் மூலவர் மகாலிங்கப் பெருமான். கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அன்னை பிரகத் சுந்தர குஜாம்பாள் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு வந்தபின் கொலைக்கான தோசம் வரகுண பாண்டிய மன்னனுக்கு நீங்கியது. அதே வாசல் வழியாக வருவான் பாண்டியன் என்றும் இங்கே கிழக்கு கோபுர வாசலில் இன்றும் காத்திருக்கும் பிரம்மஹத்தி என்ற தேவதைக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. மகாலிங்கம் பாண்டிய மன்னனை வேறு பாதையில் திரும்பி செல்லுமாறு பணித்து அவனைத் தப்பிக்க வைத்தார்.

பட்டினத்தடிகள், பத்திரகிரியார் மேற்கு வாயிலிலும் உள்ளனர். திருக்கோவிலில் மருதவாணர் சிங்கக் கிணறு, ப்ரணவப் பிரகாரம், சித்திர பரிகாரம் ஆகியவற்றை முக்கியமாக தரிசிக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத மூகாம்பிகை சன்னதி திருவிடைமருதூரில் மட்டுமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 27 நட்சத்திரங்களும் ஒரே வளாகத்தில் ஒரே சுற்றில் எளிதில் வலம் வரக்கூடிய நிலையில் அமைந்துள்ள சிறப்பை பெற்றுள்ளது. திருவிடைமருதூர் மாதம், மாதம் இங்கே நட்சத்திரம் பூஜை  நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு வாசலில் நுழைந்து கொடி மரத்தையும், மிகப்பெரிய நந்தி தேவரையும் வலம் வந்து உள்ளே நுழையும் பொழுது, வலது புறம் உள்ளது, நட்சத்திர லிங்கங்கள் சன்னதி. அமைதியான சூழல், நிம்மதியான தரிசனம். கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறையில் போகும் வழியில் உள்ளது திருவிடைமருதூர்.

திருவிடைமருதுர், திருவொற்றியூர் தளங்களில் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் ஆராதனை செய்து, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

 

Categories

Tech |